இந்தியாவில் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் உயர்வு


இந்தியாவில் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் உயர்வு
x

Photo Credit: PTI

உலக சந்தைகளில் இந்திய வாகனங்களுக்கு தேவை இருப்பதால், ஏற்றுமதி சதவீதம் உயர்ந்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் இருந்து கடந்த 2024-2025 நிதியாண்டில் மொத்தம் 53 லட்சத்து 63 ஆயிரம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய நிதியாண்டில் 45 லட்சத்து 494 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன.

அதனுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக சந்தைகளில் இந்திய பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு நல்ல தேவை இருப்பதால், ஏற்றுமதி உயர்ந்துள்ளது. பயணிகள் வாகனத்தை கணக்கில் எடுத்தால் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 6 லட்சத்து 72 ஆயிரத்து 105 பயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 7 லட்சத்து 70 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

1 More update

Next Story