இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை எதிரொலியாக உச்சம் கண்ட பங்கு சந்தைகள்

நிப்டியின் பங்குகளில் உலோகம், மருந்து, தானியங்கி துறைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் குறியீடுகளும் லாபத்துடனேயே இருந்தன.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு உச்சமடைந்து காணப்பட்டது. இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 232.90 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயர்ந்து 85,051.03 புள்ளிகளாக உள்ளது.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 72.65 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயர்ந்து 25,971.20 புள்ளிகளாக உள்ளது. நிப்டியின் பங்குகளில் உலோகம், மருந்து, தானியங்கி துறைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் குறியீடுகளும் லாபத்துடனேயே இருந்தன.
இதுபற்றி சந்தை நிபுணர் அஜய் பாக்கா கூறும்போது, இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நன்றாக முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்ற தலைமை பொருளாதார ஆலோசகரின் அறிக்கையால் நம்பிக்கை அதிகரித்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதனால், இன்று காலை நேர்மறையாகவே வர்த்தகம் தொடங்கியது என்று கூறினார்.






