சென்னை ஐகோர்ட்டில் வேலை: 41 காலிப்பணியிடங்கள்

கோப்புப்படம்
இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் அசிஸ்டண்ட் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இது குறித்த விவரங்கள் வருமாறு:
பணி வழங்கும் நிறுவனம்: சென்னை ஐகோர்ட்
காலி பணி இடங்கள்: 41
பதவி: அசிஸ்டண்ட் புரோகிராமர்
பணி புரியும் இடம்: சென்னை
கல்வி தகுதி: பி.எஸ்சி., பி..சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.இ., எம்.டெக் (சாப்ட்வேர் டெவெலப்மெண்ட் சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்)
வயது: 1-7-2025 அன்றைய தேதிப்படி குறைந்த பட்ச வயது: 18; அதிகபட்ச வயது: 37. சில பிரிவினருக்கு வயது வரம்பு மாறுபடும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறனறி தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-9-2025
இணையதள முகவரி: https://www.mhc.tn.gov.in/recruitment/login






