தீபாவளியை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் 1.5 லட்சம் விளக்குகள் ஏற்றி கொண்டாட்டம்

டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். பட்டாசுகள், புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ள நிலையில், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி அரசு சார்பில் 1.5 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு ‘விளக்கு திருவிழா’ கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை எனப்படும் கடமை பாதையில், முதல் மந்திரி ரேகா குப்தா விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ராமாயண காட்சிகளை சித்தரிக்கும் வகையில் வானில் நடத்தப்பட்ட டிரோன் ஷோ நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
Related Tags :
Next Story






