குஜராத்தில் மந்திரிகள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா

புதிய மந்திரிகள் நாளை பதவியேற்க ஏதுவாக தற்போது பதவியில் இருந்த 16 பேரும் ராஜினாமா செய்ததாத சொல்லப்படுகிறது.
அகமதாபாத்,
குஜராத்தில் முதல் மந்திரி பூபேந்திர படேல் மந்திரி சபையில் உள்ள மந்திரிகள் 16 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். புதிய மந்திரிகள் பதவியேற்க ஏதுவாக தற்போது பதவியில் இருந்த 16 பேரும் ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பை சேர்ந்தவர்களுக்கும் புதிய மந்திரி சபையில் வாய்ப்பளிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.
புதிதாக மந்திரிகளாக பதவியேற்க உள்ள எம்.எல்.ஏக்களின் பட்டியலோடு இன்று இரவு கவர்னரை முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்திக்க உள்ளார். நாளை காலை 11.30 மணிக்கு பதவியேற்பு நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story






