திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமிகள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமிகள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 8 Jun 2025 12:38 PM IST (Updated: 8 Jun 2025 5:10 PM IST)
t-max-icont-min-icon

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்காம்பூர் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 3ம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதே பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் ( 14 வயது, 15 வயது) சென்றுள்ளனர்.

திருமணத்திற்கு சென்ற சிறுமிகளை அதேபகுதியை சேர்ந்த 4 பேர் கடத்தி சென்றுள்ளனர். ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு சிறுமிகளை கடத்தி சென்ற 4 பேரும் சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் ஆள் நடமாட்டமற்ற பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு விசாகப்பட்டினத்திற்கு தப்பியோட முயன்ற 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story