மத்தியபிரதேசத்தில் 25 திருநங்கைகள் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

விசாரணைக்குப் பிறகுதான் திருநங்கைகள் என்ன பொருளை உட்கொண்டார்கள் என்பது தெளிவாகும் என துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா கூறியுள்ளார்.
இந்தூர்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த திருநங்கைகள் சமூகத்தை சேர்ந்த சுமார் 25 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் வசந்த் குமார் நிங்வால் கூறும் போது, ‘‘திருநங்கைகள் சமூகத்தை சேர்ந்த சுமார் 25 பேர் எங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒன்றாக பினாயிலை குடித்து உள்ளனர். தற்போது அவர்களது நிலைமை நன்றாக உள்ளது’’ என்றார்.
இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா கூறும்போது, ‘‘விசாரணைக்குப் பிறகுதான் திருநங்கைகள் என்ன பொருளை உட்கொண்டார்கள் என்பது தெளிவாகும். உள்ளூரில் உள்ள திருநங்கை சமூகத்தை சேர்ந்த 2 குழுக்களுக்கு இடையேயான தகராறில் இந்த சம்பவம் நடந்தது’’ என தெரிவித்தார்.
Related Tags :
Next Story






