ஜார்கண்டில் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி


ஜார்கண்டில் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி
x

ஜார்கண்டில் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்டின் கும்லா மாவட்டத்தில் உள்ள பாசியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனச் சோதனை சாவடிக்கு அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கும்லா எஸ்பி ஷம்பு குமார் சிங் கூறுகையில், " பேருடன் சென்ற கார், சோதனை சாவடி அருகே பீடி இலைகளை ஏற்றி வந்த லாரி மீது மோதியது. காரில் இருந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு சிம்டேகாவிலிருந்து ராஞ்சிக்கு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இறந்தவர்கள் ராஞ்சியில் உள்ள பிஸ்கா மோர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார், ரத்தன் கோஷ் மற்றும் பவன் சாஹு என அடையாளம் காணப்பட்டனர்" என்றார்.

1 More update

Next Story