ஒடிசா: பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
பாட்னா,
ஒடிசா மாநிலம் சபர்னபூர் மாவட்டம் பிரமஹராஜ்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு பணிமுடிந்து இளம்பெண் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சாலையில் நடந்துகொண்டிருந்த இளம்பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்துள்ளது. ஆள்நடமாட்டமற்ற பகுதியில் சென்றபோது திடீரென அந்த கும்பல் இளம்பெண் முகத்தில் மயக்க மருந்து அடித்துள்ளது. பின்னர், மயங்கிய நிலையில் இருந்த இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
பின்னர் சுயநினைவுக்கு வந்த இளம்பெண் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.






