"ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள்"… ஒரு மாதத்திற்கு பின் மீட்பு


3 missing Indians in Iran traced: embassy
x

கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ஈரானுக்கு சென்ற 3 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

மும்பை,

கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர் பகுதிகளில் இருந்து ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் என்ற மூன்று பேர் ஈரானுக்கு சென்றிருந்தனர். ஆனால், அவர்கள் அங்கு சென்ற பிறகு சில நாட்களில் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, இந்திய தூதரகம் ஈரானில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அவர்களை கடத்தல்காரர்கள் கடத்தியுள்ளனரா? என்ற சந்தேகத்தின் கீழ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, பல்வேறு தகவல்களை சேகரித்து வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன 3 பேரும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய தூதரகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும், தற்போது இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story