பீகாரில் பணியின்போது குடிபோதையில் இருந்த 3 போலீசார் கைது
பணியின்போது போதையில் இருந்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பாபுவா,
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் சன்கான் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பணியில் இருந்த சில போலீசார் குடிபோதையில் இருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில் சன்கான் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் ஏட்டுகள் சந்திரஜித், அமரேந்திர குமார் ஆகியோர் குடிபோதையில் பணியில் இருந்துள்ளனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த சோனுகுமார் என்பவரும் போலீஸ் நிலையத்தில் போதையில் இருந்துள்ளார். அங்கு புகார் கொடுக்க வந்த சிலர், இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து 3 போலீசார் மற்றும் சோனு குமார் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் போதையில் இருந்த போலீசார் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story