சிறுத்தை தாக்கி 3 பெண்கள் காயம்

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உனா,
இமாசலபிரதேச மாநிலம் உனா மாவட்டம் ஹரோலி துணை மண்டல வனப்பகுதி அருகே பால்க்வா கிராமம் அமைந்துள்ளது. நேற்று காலையில் இந்த கிராமத்தையொட்டி விளைநிலங்களில் ஏராளமான பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை, பெண்களை தாக்க முயன்றது. அதையடுத்து அவர்கள் சிதறி ஓடினர்.
அப்போது 3 பெண்களை விடாமல் துரத்திச் சென்ற சிறுத்தை அவர்களை கொடூரமாக தாக்கியது. இதில் ஒரு பெண்ணின் கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. மற்ற 2 பெண்களும் லேசான காயங்களுடன் தப்பினர். தற்போது 3 பெண்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






