5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: மளிகைக்கடைக்காரர் கைது

கோப்புப்படம்
சிறுமிக்கு சாக்லெட் தருவதாக கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா திப்புரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால ரெட்டி. இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது கடைக்கு வந்த 5 வயது சிறுமிக்கு சாக்லெட் தருவதாக கூறி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனது வீட்டுக்கு சென்றுள்ளாள். அவளது உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதை பார்த்த அவளது பெற்றோர்கள், சிறுமியிடம் கேட்டனர்.
அப்போது தான் சிறுமியை, கோபால ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் பற்றி பெற்றோர், சிட்லகட்டா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ வழக்கில் கோபால ரெட்டியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






