பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்-தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று, பட்டியலில் உள்ள வாக்காளர்களை சரிபார்த்து வருகிறார்கள்
பாட்னா.
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வருகிறது. தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று, பட்டியலில் உள்ள வாக்காளர்களை சரிபார்த்து வருகிறார்கள்.
இந்த சரிபார்ப்பின் போது பட்டியலில் இடம் பெற்றுள்ள 18 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டதும், 26 லட்சம் பேர் வேறு தொகுதிகளுக்கு மாறி இருப்பதும், 7 லட்சம் பேர் இருவேறு இடங்களில் இடம் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.இதுபோன்ற காரணங்களால் 52 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Related Tags :
Next Story






