பஸ் மீது ஜீப் மோதி விபத்து - 6 பேர் பலி


பஸ் மீது ஜீப் மோதி விபத்து - 6 பேர் பலி
x
தினத்தந்தி 3 May 2025 9:45 PM IST (Updated: 4 May 2025 1:25 PM IST)
t-max-icont-min-icon

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் சபர்கந்த் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப்பில் 10க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.

ஹின்கதியா கிராம அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த பஸ் மீது ஜீப் மோதியது. விபத்து நடந்த சில வினாடிகளில் ஜீப் மீது பைக் மோதியது.

இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஜீப்பில் பயணம் செய்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story