பட்டாசு கடைகளில் பயங்கர தீ விபத்து; 65 கடைகள் எரிந்து நாசம்


பட்டாசு கடைகளில் பயங்கர தீ விபத்து; 65 கடைகள் எரிந்து நாசம்
x

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

லக்னோ,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் பலரும் பட்டாசு கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் தீபாவளியை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

அப்போது, மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் பரவியது. இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்து வெடித்து சிதறின. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர் பட்டாசு கடைகளில் பற்றி எரிந்த தீயை பலமணிநேர போராட்டத்திற்குப்பின் அணைத்தனர். இந்த தீ விபத்தில் 65 பட்டாசு கடைகள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக நஷ்டம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story