கார்கள் நேருக்கு நேர் மோதி தீப்பற்றி கோர விபத்து; 7 பேர் உடல் கருகி பலி

காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் சுரேந்திநகர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை 2 கார்கள் சென்றுகொண்டிருந்தன. இதில் ஒரு காரில் 7 பேரும் மற்றொரு காரில் 3 பேரும் பணித்தனர். டிடாரா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இரு கார்களும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் 2 கார்களும் தீப்பற்றி எரிந்தன.
இந்த சம்பவத்தில் ஒரு காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். மற்றொரு காரில் பயணித்த 3 பேரும் படுகாயமடைந்தன. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






