சாமி ஆடிய நபர், திடீரென தாக்கியதில் மயங்கி விழுந்த பக்தர் - பரபரப்பு

கூடியிருந்த பக்தர்கள் வாலிபரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நீலேஸ்வரம் பகுதியில் விஷ்ணு விஷ்ணு மூர்த்தி கோயில் உள்ளது இக்கோயிலில் திருவிழாவில் தெய்யம் எனப்படும் பாரம்பரிய வேடம் அணிந்து நடனமாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. திரளான பக்தர்கள் கூடி திருவிழாவை கண்டுகொண்டிருந்தனர். திருவிழாவில் தெய்யம் ஆடுபவர் ஒரு பக்தரை திடீரென தாக்கினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த அப்போது அந்த பக்தர் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். திருவிழாவில் தெய்யம் ஆடுபவர் தாக்கியதால் இளைஞர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






