16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் அதிகாரி?

காவல் அதிகாரி, தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய 16 வயது சிறுமி, காவல் அதிகாரியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேலி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஒன்பதாம் தேதி, வீட்டைவிட்டு வெளியேறி காதலனுடன் தமிழகம் வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட உத்தரப்பிரதேச போலீசார், சிறுமியை மீட்டு பரேலிக்கு ரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அழைத்து வந்த காவல் அதிகாரி, தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மீட்கப்பட்ட சிறுமி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் போது, சிறார் சீர்திருத்த குழுவிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்த உண்மை அம்பலமான நிலையில், உயரதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story