நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம்...வெளியான பரபரப்பு தகவல்


A sudden twist in the actress Ranya Rao case... sensational information has emerged
x

தங்க கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவ், இந்த ஆண்டில் மட்டும் 8 முறை துபாய் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். அவரிடமிருந்து, 14.2 கிலோ தங்க கட்டிகள், மற்றும் 2 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் 2 கோடியே 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு ரன்யா ராவ் தாக்கல் செய்திருந்த மனு, பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, 4 நாட்கள் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த ரன்யா ராவ் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்டதால், காவலில் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.

ஆனால், இந்த ஆண்டில் மட்டும் 8 முறை துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், எப்படி விமான நிலைய கட்டுப்பாடுகளை சர்வ சாதாரணமாக கடந்து வந்தார் என விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நாளை (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி, ஜாமீன் மனுவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

1 More update

Next Story