கேரளாவில் ஆளும் கட்சி தோல்வி: குஜராத், பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வெற்றி


கேரளாவில் ஆளும் கட்சி தோல்வி:  குஜராத், பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வெற்றி
x

கேரளா, குஜராத், மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகு திகளுக்கு கடந்த 19-ந்தேதி இடைத் தேர்தல் நடை பெற்றது. 5 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

புதுடெல்லி

கேரளா

கேரள மாநிலம் நிலம்பூர் தொகுதியில், ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ.வான பி.வி.அன்வர், முதல்-மந்திரி பினராய் விஜயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.எல்.ஏ. பதவி யை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின.

பி.வி.அன்வர் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதி பிரியங்கா காந்தியின் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்குள் வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்த தொகுதியில் பினராயி விஜயன் கட்சி தோல்வி அடைந்தது. ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 11,077 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றார்.

குஜராத்

குஜராத் மாநிலம் விசா வதர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பூபேந்திர பயானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் பா.ஜ.க. வில் இணைந்தார். காடி தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கர்சன்பாய் சோலங்கியின் மரணத்தால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 2 தொகுதிகளிலும் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. இதில் காடி தொகுதியில் பாஜகவின் ராஜேந்திரன் சவ்டா 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காள மாநிலம் காளிகஞ்ச் தொகு தியில் ஆளும் திரிணாமுல் காங்கி ரஸ் எம்.எல்.ஏ. நசிருதீன் அகமது மரணம் அடைந்த தால் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணா முல், பா.ஜ.க., காங்கி ரஸ் என மும்முனை போட்டி நிலவியது. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலம் லூதி யானா மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி மரணம் அடைந்ததால் அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

1 More update

Next Story