பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: முன்னாள் விமானப்படை அதிகாரி கைது

ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பாகிஸ்தானுக்கு குலேந்திர சர்மா பகிர்ந்துள்ளார்.
திஸ்பூர்,
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிகாரிகள் நடத்திய தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணையை தொடர்ந்து, ஓய்வுபெற்ற முன்னாள் விமானப்படை அதிகாரி குலேந்திர சர்மா அசாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் முக்கிய ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அசாம் போலீசார் குலேந்திர சர்மாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தனியாக செயல்பட்டாரா? அல்லது இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






