அகமதாபாத்தில் விமான நிலையம் மூடல்: சிறப்பு ரெயில்கள் இயக்கம்

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அகமதாபாத் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, தரையிறக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகமதாபாத்தில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.அகமதாபாத்தில் தவிக்கும் பயணிகள் வசதிக்காக டெல்லி மும்பைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.






