அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உயிரிழப்பு

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது.
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபாணி (68) பயணம் செய்திருந்தார். விமான விபத்தால் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விஜய் ரூபாணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் லண்டனில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக விமானத்தில் பயணம் மேற்கொண்ட நிலையில், விமான விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
Related Tags :
Next Story






