டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து


டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீ விபத்து
x

ஹாங்காங்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தது.

டெல்லி,

ஹாங்காங்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மாலை டெல்லி வந்தது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய நிலையில் அதில் இருந்து பயணிகள் வெளியேறிக்கொண்டிருந்தனர். அப்போது விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமானத்தின் பின் பகுதியில் (வால் பகுதியில்) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் விமானத்தில் உள்ள பாகங்கள் லேசான சேதமடைந்தன. அதேவேளை, தீ விபத்தில் விமானத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தின் ஆக்சலரி பவர் யூனிட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story