ஆந்திரா கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
Published on

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாவது;

"ஆந்திரா ஸ்ரீகாகுளம் கோவில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலியான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com