பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

டெல்லியில் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வேறு மாதிரி இருந்தாலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. மகாராஷ்டிரத்தில் தேர்தலில் மாலை 5:30 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரித்தது.

மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. தேர்தல்கள் ஜோடிக்கப்படுகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. வாக்காளர் பட்டியல் விவரங்களை பகிர தேர்தல் ஆணையம் மறுக்கிறது.தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது.

ஒரு நபருக்கு பல மாநிலங்களில் வாக்கு உள்ளது. கர்நாடகாவின் மஹாதேவபுரா பகுதியில் கிட்டத்தட்ட 12,000 போலி வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் விவரங்களை நாங்கள் ஆய்வு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கருதுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story