பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பா? காஷ்மீரில் 10 இடங்களில் அதிரடி சோதனை


பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ப்பா? காஷ்மீரில் 10 இடங்களில் அதிரடி சோதனை
x

பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி அப்துல்லா காசி என்பவருடைய கூட்டாளிகள் உள்ளூர் இளைஞர்களை மூளை சலவை செய்து பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று 10 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள், காண்டர்பால், புட்காம், புல்வாமா, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

1 More update

Next Story