ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு


ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
x

ஆசியாவிலேயே அதிக வயதான யானையாக வட்சலா திகழ்ந்தது.

போபால்,

ஆசியாவிலேயே அதிக வயதான யானையாக வட்சலா திகழ்ந்தது. 100 வயதான வட்சலா பெண் யானை மத்தியபிரதேசத்தின் பனா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்தது. ஆசியாவிலேயே வயதான யானை என்பதால் வட்சலாவை காண பனா சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வந்தனர்.

இந்நிலையில், ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா நேற்று முன் தினம் உயிரிழந்தது. கால் நகங்களில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டுவந்த யானைக்கு பனா சரணாலயத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி வடலா யானை உயிரிழந்தது. யானைக்கு வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1 More update

Next Story