இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவுவாயிலாக அசாம் உருவெடுத்து வருகிறது: பிரதமர் மோடி


இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவுவாயிலாக அசாம் உருவெடுத்து வருகிறது:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 21 Dec 2025 1:07 AM IST (Updated: 21 Dec 2025 1:52 AM IST)
t-max-icont-min-icon

அசாம் வளர்ச்சியில் மீண்டும் புதியதொரு அத்தியாயம் சேர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

கவுகாத்தி,

அசாமின் கவுகாத்தி நகரில் லோகபிரியா கோபிநாத் பர்தலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்து, திரளாக கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசினார்.

அப்போது அவர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவுவாயிலாக உருவெடுத்து வருகின்றன என கூறினார். முன்னேற்றத்திற்கான ஒளி மக்களை வந்தடையும்போது, வாழ்வின் ஒவ்வொரு பாதையும் புதிய உச்சங்களை தொட தொடங்குகிறது என கூறினார்.

அசாம் மற்றும் வடகிழக்கு மாநில தாயார்கள் மற்றும் சகோதரிகளின் கனிவு மற்றும் சொந்தம் என்ற உணர்வு, மக்களின் அன்பு மற்றும் நேசம் மற்றும் அசாம் நிலத்துடனான தன்னுடைய ஆழ்ந்த பிணைப்பு ஆகியவை பிராந்திய வளர்ச்சிக்கு கூட்டாக தீர்வு காண்பதற்கு, தொடர்ந்து தனக்கு உந்துதலையும் மற்றும் வலிமையையும் தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அசாம் வளர்ச்சியில் மீண்டும் புதியதோர் அத்தியாயம் சேர்ந்துள்ளது என்றும் அவர் அப்போது சுட்டி காட்டினார்.

1 More update

Next Story