பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி


பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி
x
தினத்தந்தி 13 Oct 2025 5:45 AM IST (Updated: 13 Oct 2025 5:45 AM IST)
t-max-icont-min-icon

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

கோழிக்கோடு,

கோழிக்கோடு அருகே நரிக்குணி பகுதியை சேர்ந்தவர் அசிஸ் (வயது 45). தொழிலாளி. இவர், பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

உடனே சிறுமி சத்தம் போட்டு விட்டு, அங்கிருந்து ஓடினாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அசிஸை கைது செய்தனர்.

1 More update

Next Story