பம்பையில் இன்று அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்


பம்பையில் இன்று அய்யப்ப பக்தர்கள் சங்கமம்: பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்
x

தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி சங்கம நிகழ்வு இன்று (சனிக்கிழமை) பம்பையில் நடக்கிறது. இந்த சங்கம நிகழ்ச்சியை முதல்-மந்திரி பினராயி விஜயன் காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு உள்பட தென் மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

மேலும் 27 வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பிரதிநிதிகள் மற்றும் கேரளாவை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் சேகர்பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட விருந்தினர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் அறுசுவை விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சங்கமம் நிகழ்வு நடத்துவதற்காக பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கெடுக்கும் தேவஸ்தான ஊழியர்களின் போக்குவரத்து செலவுகளை தேவஸ்தான நிதியில் இருந்து மேற்கொள்ள தேவஸ்தான கமிஷனர் வெளியிட்ட உத்தரவை கேரள ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.

1 More update

Next Story