படுத்த படுக்கையான கணவன், ஏழ்மை... 5-வது பிறந்த ஆண் குழந்தையை கொன்ற 40 வயது தாய்


படுத்த படுக்கையான கணவன், ஏழ்மை... 5-வது பிறந்த ஆண் குழந்தையை கொன்ற 40 வயது தாய்
x

5-வது பிறந்த குழந்தையை வளர்க்க போதிய வசதி இல்லை மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குத்தி தேவி (வயது 40) என்ற கர்ப்பிணிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவம் ஏற்பட்டது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், வார்டில் இருந்த மற்ற அனைவரும் தூங்கியதும், தேவி குழந்தையின் கழுத்தில் துணியால் சுற்றி, மூச்சு திணற செய்து கொலை செய்துள்ளார். நேற்று காலை தேவியின் மூத்த சகோதரி மைனா தேவி, குழந்தையை பார்த்தபோது அது அசைவற்று இருந்துள்ளது. அதன் கழுத்தில், காயங்கள் இருந்தன.

இதனால் பதறிய அவர் உடனடியாக மருத்துவர்களிடம் ஓடி சென்று விவரங்களை கூறினார். அவர்கள் வந்து பார்த்தபோது குழந்தை இறந்து இருந்தது தெரிய வந்தது. அதனை உறுதிப்படுத்தியதும் உறவினர்கள் அழுதனர். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. புதிதாக பிறந்த குழந்தையை தாய் தேவியை கொலை செய்தது தெரிய வந்தது. அவருடைய கணவர் தாராசந்த் படுத்த படுக்கையாக இருக்கிறார். ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், 5-வது பிறந்த குழந்தையை வளர்க்க போதிய வசதியின்மை மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குத்தி தேவிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story