புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறிவருகிறது; பிரதமர் மோடி


புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறிவருகிறது; பிரதமர் மோடி
x

பெங்களூருவில் 3 புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று பெங்களூருவில் 3 புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

மேலும், பெங்களூரு மெட்ரொ ரெயில் மஞ்சள் வழித்தடத்தை திறந்து வைத்தார். மேலும், 15 ஆயிரத்து 610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெங்களூரு மெட்ரோ ரெயில் 3ம் கட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது,

புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறிவருகிறது. பெங்களூருவின் ஆன்மாவில் ஆன்மிக அறிவு உள்ளது. அதேவேளை, அதன் செயல்பாடுகளில் தொழில்நுட்ப அறிவு உள்ளது. பெங்களூருவின் வெற்றிக்கு இங்குள்ள அறிவார்ந்த மக்களின் முயற்சியே காரணம். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி நமது தொழில்நுட்பம், மேக் இன் இந்தியாவின் வலிமையை காட்டுகிறது. பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வல்லமையை நாம் எடுத்துக்காட்டி பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம்.

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பார்த்துள்ளது. பெங்களூருவும், அதன் இளைஞர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முக்கிய பங்காற்றினர்.

என்றார்.

1 More update

Next Story