பஸ்சுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை மாடு...வீடியோ


பஸ்சுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காளை மாடு...வீடியோ
x

சாலை அருகில் இரண்டு காளை மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகில் அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு டோட்மோட் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலை அருகில் இரண்டு காளை மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.

அப்போது எதிர்பராதவிதமாக அதில் ஒரு மாடு பஸ்சுக்குள் நுழைந்தது. இதை சற்றும் எதிர்பாராத பயணகள் அலறி ஓடத்தொடங்கினர். காளையானது பஸ்சுக்குள் துள்ளிகுதித்து பெரும் அட்டகாசம் செய்ததை அடுத்து அனைவரும் பஸ்சைவிட்டு தெறித்து ஓடினர். இதையடுத்து காளை மாடு பஸ் கண்ணாடியை கொம்புகளால் மோதி முற்றிலும் சேதப்படுத்தியது.

இந்த சம்பவத்தால் பஸ்சில் இருந்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர்.


Next Story