அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: மவுனம் கலைத்த கவுதம் அதானி


அமெரிக்க கோர்ட்டில் வழக்கு: மவுனம் கலைத்த கவுதம் அதானி
x
தினத்தந்தி 1 Dec 2024 2:22 AM IST (Updated: 1 Dec 2024 7:37 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை பின்பற்றியே அதானி குழுமம் செயல்படுகிறது என்று கவுதம் அதானி கூறினார்.

ஜெய்பூர்,

அதானி குழுமம் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே செயல்படுவதாக அமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு அந்தக் குழுமத்தின் தலைவா் கவுதம் அதானி பதிலளித்தாா். . ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 51-ஆவது ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் விருது விழாவில் அதானி பேசுகையில், 'அதானி குழுமம் சட்ட விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லை என்று 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதானி குழுமம் ஆலோசித்து வருகிறது. .இதுபோன்ற சவால்களை அதானி குழுமம் சந்திப்பது இது முதல்முறையல்ல. இத்தகைய தாக்குதல்கள் அதானி குழுமத்தை வலுப்படுத்தவே செய்கின்றன. சட்ட விதிமுறைகளை பின்பற்றியே அதானி குழுமம் செயல்படுகிறது' என்றார்.


Next Story