தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி


தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி
x

பிரமிளா தனது வீட்டில் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.2 லட்சம் வைத்திருந்தார்.

போபால்,

மத்தியபிரதேசத்தில் தோழி வீட்டில் ரூ.2 லட்சத்தையும், விலை உயர்ந்த செல்போனையும் திருடியதாக பெண் போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலில் போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருந்தவர் கல்பனா ரகுவன்ஷி. போலீஸ் தலைமை அலுவலகத்தில் சிறப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவரது தோழியின் பெயர் பிரமிளா திவாரி (வயது 35). எல்.ஐ.சி.யில் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது வீடு போபாலின் ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ளது. பிரமிளா திவாரியின் வீட்டுக்கு பெண் டி.எஸ்.பி. அடிக்கடி செல்வது வழக்கம்.

இதற்கிடையே சம்பவத்தன்று பிரமிளா தனது வீட்டில் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.2 லட்சம் வைத்திருந்தார். இதனை யாரோ திருடிச்சென்று விட்டனர். மேலும் ‘சார்ஜ்’ போட்டியிருந்த செல்போனும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது வீட்டுக்கு வந்துசென்ற கல்பனா ரகுவன்ஷி, ரூ.2 லட்சம் மற்றும் தோழியின் செல்போனையும் திருடிச்சென்றதாக கூறியிருந்தார்.

புகாரின்பேரில் கல்பனா ரகுவன்ஷி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பணத்தை திருடிய டி.எஸ்.பி. பணம், செல்போனுடன் வெளியேறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அவற்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணையை முடுக்கியுள்ளனர்.

1 More update

Next Story