2027 மார்ச் 1-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - மத்திய அரசு


2027 மார்ச் 1-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - மத்திய அரசு
x
தினத்தந்தி 12 Dec 2025 4:36 PM IST (Updated: 12 Dec 2025 6:55 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி சாதிவாரியாக நடைபெற உள்ளது. மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை என்றும், இந்த பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

1 More update

Next Story