பீகாரில் நடைபெறும் ராகுல் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்


பீகாரில் நடைபெறும் ராகுல் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 23 Aug 2025 4:45 AM IST (Updated: 23 Aug 2025 4:45 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் யாத்திரையில் 29-ந்தேதி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

வாக்கு திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி யாத்திரை தொடங்கியுள்ளார்.

இந்த யாத்திரையில் வருகிற 26, 27-ந்தேதிகளில் பிரியங்காவும், 27-ந்தேதியும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 29-ந்தேதி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இதேபோல் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், முதல்-மந்திரிகள் ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) சுக்விந்தர் சுகு (இமாசலப்பிரதேசம்) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்

1 More update

Next Story