பள்ளி விடுதியில் தங்கிப்படித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்


பள்ளி விடுதியில் தங்கிப்படித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
x

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமராவதி,

அந்திரை மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜநகரத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவனை கடந்த திங்கட்கிழமை அவரது தந்தை பள்ளியில் உள்ள விடுதியில் சேர்த்துள்ளார். ஆனால், தான் பள்ளி விடுதியில் தங்க விரும்பமில்லை என்றும் , வீட்டிலிருந்து பள்ளிக்கு வரவே விரும்புவதாகவும் மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால், மாணவனின் தந்தை அதை பொருட்படுத்தாமல் பள்ளி விடுதியில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, மாணவனின் உடலை மீட்ட போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story