தெலுங்கானாவில் முழு அடைப்பு போராட்டம்

பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் உள்ளாட்சித்தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஐகோர்ட்டு சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.
இதை கண்டித்து பிற்படுத்தப்பட்டோர் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா, பி.ஆர்.எஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் ஆதரவு அளித்தன.
அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. சாலைகளில் வாகன போக்குவரத்தும் குறைவாகவே காணப்பட்டது.
Related Tags :
Next Story






