பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

பங்கஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் கோட்வாலி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் பங்கஜ் பதக்.
இவர் கோட்வாலி பகுதியில் வசித்து வரும் பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ்கள், புகைப்படங்கள் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீஸ்காரர் பங்கஜ் பதக்கை சஸ்பெண்டு செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பங்கஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் எஸ்.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, பங்கஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






