காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் வீர மரணம்

காஷ்மீர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர சோதனை நடத்தினர்.
காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் வீர மரணம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் உதம்ப்பூர் மாவட்டம் சோஹன் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் நேற்று இரவு காஷ்மீர் போலீசாரும், மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அம்ஜத் பதான் என்ற போலீஸ்காரர் வீர மரணமடைந்தார். பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்புப்படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com