பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ வீடியோக்களை நீக்க வேண்டும்: காங்கிரசுக்கு கோர்ட்டு உத்தரவு

மோடியின் தாயார் குறித்த ஏஐ வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன
பாட்னா,
ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை பீகார் காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதில் பிரதமர் மோடியின் கனவில் அவரது மறைந்த தாயார் வந்து, பிரதமர் மோடியின் பீகார் அரசியல் குறித்து விமர்சனம் செய்வது போல் கருத்துக்கள் இடம் பெற்று இருந்தன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனங்கள் எழுந்தன. கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன. தொடர்ந்து பாஜக தேர்தல் பிரிவைச் சேர்ந்த சங்கேத் குப்தா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பாட்னா ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு , சமூக வலைதளங்களில் காணப்படும் அந்த வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story






