எனக்கு தொந்தரவாக இருந்தார்.... மாமியாரை தீவைத்து எரித்துக்கொன்ற மருமகள் - பரபரப்பு வாக்குமூலம்


எனக்கு தொந்தரவாக இருந்தார்.... மாமியாரை தீவைத்து எரித்துக்கொன்ற மருமகள் - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Nov 2025 9:39 AM IST (Updated: 9 Nov 2025 12:09 PM IST)
t-max-icont-min-icon

கனக மகாலட்சுமியின் உடலில் தீப்பற்றி அவர் தீக்கிரையாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அப்பண்ணாபாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (வயது 66). அவரது மகன் சுப்பிரமணிய சர்மா. இவருக்கு திருமணமாகி லலிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சுப்பிரமணிய சர்மா வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்து புகை கிளம்பி வெளியேறியது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது, கனக மகாலட்சுமியின் உடலில் தீப்பற்றி அவர் தீக்கிரையாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் விசாரணையில், டி.வி. அருகே மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாக மருமகள் லலிதா போலீசாருக்கு தெரிவித்தார்.போலீசார் சோதித்ததில் வீட்டில் மின் கசிவு ஏற்படவில்லை என தெரியவந்தது. இதனால் போலீசாரின் சந்தேக பார்வை லலிதா மீது விழுந்தது. இதையடுத்து அவரை பல கோணங்களில் போலீசார் விசாரித்தனர். அப்போது மாமியார் ஜெயந்தி கனக மகாலட்சுமியை தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது:- எனது மாமியார் ஜெயந்தி கனக மகாலட்சுமி எங்களுடன் வசிப்பது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு அவர் தொந்தரவாக இருந்தார். மேலும் அவர் என்னை கட்டுப்படுத்தும் விதத்தில் எனக்கு உத்தரவிட்டு கொண்டே இருந்தார். மேலும் எனக்கு கொடுமைகள் செய்து வந்தார்.

இதனால் அவரை எனது கணவர் இல்லாதபோது கொலை செய்து விட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர் இறந்து விட்டது போல் ஏமாற்றி விடலாம் என திட்டமிட்டேன். அதன்படி மாமியாரின் கை, கால்களை பலமான கயிற்றால் கட்டிப்போட்டேன். அதன் பிறகு அவரது கண்களை கட்டி விட்டேன். அதன் பிறகு அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு ஒரு ஓரமாக தள்ளி விட்டேன். அவர் தீயில் எரியும் பொழுது அவரது சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக டி.வி. சத்தத்தை அதிகப்படுத்தி வைத்துவிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story