ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு: டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா


ஒவ்வொரு மாநில முக்கிய நாட்களை திருவிழாவாக கொண்டாட முடிவு:  டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா
x

டெல்லியில் வசிக்கும் அனைத்து சிக்கிம் மக்கள் மீதும் டெல்லி அரசு முழு கவனம் செலுத்தும் என ரேகா குப்தா உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லி,

சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்று 50 ஆண்டுகள் ஆகின்றன. அதன் 50-வது ஆண்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி செயலகத்தில், முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் டெல்லி மந்திரிகள் ஆஷிஷ் சூட் மற்றும் கபில் மிஷ்ரா உள்ளிட்டோர் சிக்கிம், மாநில அந்தஸ்து பெற்ற 50-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறும்போது, இந்தியாவின் அடையாளம் என டெல்லி உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநில மக்களும் டெல்லியில் வசித்து வருகிறார்கள். சிக்கிமை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் டெல்லியில் வசிக்கிறார்கள்.

சிக்கிம் மாநில தினத்தில், அந்த மாநில மக்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நாட்களை ஒரு திருவிழாவாக கொண்டாட டெல்லி அரசு முயற்சிக்கும். இந்த முடிவை டெல்லி அரசு எடுத்துள்ளது. டெல்லியில் வசிக்கும் அனைத்து சிக்கிம் மக்கள் மீதும் டெல்லி அரசு முழு கவனம் செலுத்தும் என நான் உறுதியளிக்கிறேன் என்றார்.

1 More update

Next Story