பட்டாசு மீதான தடையை நீக்காமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது; டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா


பட்டாசு மீதான தடையை நீக்காமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது; டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா
x

பட்டாசு மீதான தடையை நீக்காமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது என்று டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் பட்டாசு வெடிப்பது, உற்பத்தி, விற்பனை, இருப்பு வைப்பது ஆகியவற்றிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க அனுமதி கோரி டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது.இந்த நிலையில், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, அக்டோபர் 18 முதல் 21 வரை டெல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது:“அக்டோபர் 18 முதல் அக்டோபர் 21 வரை பசுமை பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்கப்படும். க்யூஆர் குறியீடுகளுடன் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க காவல்துறை ரோந்து குழுவை அமைக்க வேண்டும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். ஆன்லைன் வலைத்தளங்களில் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா இதுதொடர்பாக கூறியதாவது: “கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது தீபாவளி. பட்டாசு மீதான தடையை நீக்காமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது. சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வதும், அதே நேரத்தில் நமது கலாசாரத்தை பாதுகாப்பதும் நமது பொறுப்பு,” என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story