டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை இன்று ரத்து

பாரீஸ் நகரில் இருந்து டெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் ஏ.ஐ.143 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானத்தின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, விமானம் புறப்படுவதற்கு முன்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய விமான ஆய்வின்போது, தொழில் நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்தே, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என கூறினார். விமான பயணிகளுக்கு ஓட்டல் வசதியை வழங்கியிருக்கிறோம். பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், முழு கட்டண தொகையையும் திருப்பி தரவோ அல்லது பயணிகள் விரும்பினால், மீண்டும் விமான பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தவோ தயாராக இருக்கிறோம் என்றார்.
இதேபோன்று, பாரீஸ் நகரில் இருந்து டெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஆமதாபாத்-லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மற்றொரு ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.






