டெல்லி உள்பட பல பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை: ரூ. 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பணம் பறிமுதல்

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 330 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
டெல்லி,
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 330 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. இதையடுத்து, இந்தியர்களை மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அனுப்பிய கும்பல் குறித்தும், இதில் நடைபெற்ற பண மோசடி குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய 3 மாநிலங்களில் 13க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ. 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனையை தொடர்ந்து பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






