மதுபானம் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி


மதுபானம் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி
x

கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கர்நாடகாவில் இருந்து லாரியில் இன்று அதிகாலை கேரளாவின் எர்ணாகுளத்திற்கு மதுபானம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. லாரியை அகில் கிருஷ்ணன் (வயது 30) என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார்.

இந்ந்லையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் இருங்கடன்பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த கார் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் அகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் டிரைவர் லேசான காயமடைந்தார். இந்த விபத்தில் லாரியில் 700 பெட்டிகளில் ஏற்றி வந்த மதுபான பாட்டில்கள் உடைந்து மதுபானம் சாலையில் ஆறாக ஓடியது.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கார் டிரைவரை கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த அகிலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story